நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த காதலன் 5 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு; கரையேறி தப்பிய காதலி..!
நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த காதலன் 5 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு; கரையேறி தப்பிய காதலி..!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர், வரதராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் சாஹர் (வயது 21). கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் கல்லூரியில் படித்து வருகிறார்.
இருகூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவியை காதலித்து வந்த சாகர், கடந்த 29ம் தேதி காதலியுடன் வால்பாறை சென்றுள்ளார். அங்கு சோலையாறு எஸ்டேட்டில், பிர்லா நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
நீர்வீழ்ச்சியில் காதல் ஜோடி பேசிக்கொண்டு இருந்தபோது, சாஹர் தண்ணீரில் விழுந்துள்ளார். காதலி அவரை காப்பாற்ற முயற்சித்தும் பலனில்லை. இருவரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
மாணவி தண்ணீரின் ஓட்டத்தோடு பயணித்து பாறையை இருக்க பிடித்து தப்பிக்கொண்டார். மாணவர் நீரோடு சூழலில் சிக்கி அடித்து செல்லப்பட்டார். இந்த விசயம் குறித்து வால்பாறை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் 5 நாட்களாக சாஹரின் உடலை தேடி வந்த நிலையில், இன்று அவரின் சடலம் மீட்கப்பட்டது.