மசாஜ் சென்டர் அழகியாக மனைவி.. நள்ளிரவு வேலையை நோட்டமிட்ட கணவனுக்கு பேரதிர்ச்சி.. கோவையில் பகீர்.!
மசாஜ் சென்டர் அழகியாக மனைவி.. நள்ளிரவு வேலையை நோட்டமிட்ட கணவனுக்கு பேரதிர்ச்சி.. கோவையில் பகீர்.!
இரவு வேலை என கூறி பணிக்கு செல்லும் மனைவி சந்தேகத்திற்கு இடமான சோர்வுடன் வீட்டிற்கு வருவதால் சந்தேகமடைந்த கணவனுக்கு பெரும் அதிர்ச்சி தகவல் இறுதியில் கிடைத்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் கே.ஜி. சாவடியில் 30 வயது பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவர், 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். பெண்ணின் கணவர் இரயில்வே ஊழியராக பணியாற்றுகிறார். இந்த இளம்பெண் தனது கணவரிடம் வேலைக்கு செல்கிறேன் என்று கூறிய நிலையில், அவரும் வேலைக்கு செல்ல அனுமதித்துள்ளார்.
தினமும் இரவு நேர பணி என்று புறப்படும் இளம்பெண், நள்ளிரவு நேரத்தில் அசதியுடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். மேலும், நாட்கள் செல்லச்செல்ல அவரின் நடவடிக்கையும் மாறி குழந்தைகளை கவனிக்காமல் இருந்துள்ளார். இதனால் மனைவி என்ன வேலைக்கு செல்கிறார் என கணவர் கண்காணிக்க திட்டமிட்டுள்ளார்.
சம்பவத்தன்று மனைவி வேலைக்கு புறப்பட்டு சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்ற கணவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. இரவு நேரத்தில் பணி என்று புறப்பட்டு சென்ற மனைவி மசாஜ் சென்டரில் வேலை பார்ப்பது அம்பலமானது. அவர் மசாஜ் சென்டருக்கு வாடிக்கையாளராக வரும் நபரோடு வெளியே சென்றுள்ளார்.
அங்கு தனிமையான இடத்தில் இருவரும் உல்லாசமாக இருக்க, பின்னர் நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பியுள்ளார். தனது மனைவியின் வேலையை அறிந்த கணவர் மனைவியிடம் வீட்டில் வைத்து கேட்கையில் பல ஆண்களுடன் அவர் கள்ளக்காதல் வைத்திருப்பதும் தெரியவந்தது.
கணவருக்கு உண்மை தெரிந்துவிட்டது என நினைத்த பெண்மணி, மறுநாளில் வேலைக்கு செல்வதாக குழந்தைகளிடம் கூறிவிட்டு மாயமாகி இருக்கிறார். இதனால் மனைவியை கண்டறிந்து தரக்கூறி இளம்பெண்ணின் கணவர் கே.ஜி. சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.