ரயிலில் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவன்... இறப்பதற்கு முன் ஓடும் ரயிலில் செய்த சாகசங்கள்.. வீடியோ வைரல்..!
ரயிலில் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவன்... இறப்பதற்கு முன் ஓடும் ரயிலில் செய்த சாகசங்கள்.. வீடியோ வைரல்..!
2 நாட்களுக்கு முன்னதாக ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இளைஞர், சில நாட்களுக்கு முன்னதாக நண்பர்களுடன் ஓடும் ரயிலில் சாகசம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் நோக்கி மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த மாநிலக்கல்லூரி மாணவன் நீதிதேவன் வேப்பம்பட்டு செல்லும் வழியில் ரயிலிலிருந்து தடுமாறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், அவர் இரு நாட்களுக்கு முன்னதாக தனது சக நண்பர்களுடன் ஓடும் ரயிலில் ஏறியும், நடமேடையை காலால் உரசியும் சாகசம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.இந்த வீடியோ காவல்துறையினரின் கவனத்திற்கு சென்ற நிலையில், தங்களின் எச்சரிக்கையை மீறி மாணவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் மட்டுமே உயிரிழப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.