ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்..! ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.!
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுவதும் மிக அத்தியாவசியமானதாக உள்ளது. நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தினம்தினம் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழக அரசும் அனுமதி அளித்தது. உற்பத்திக்கு தேவையான மின்சாரம், குடிநீர் போன்றவற்றை தமிழக அரசு வழங்குகிறது. ஆலையின் வேறு அலகுகள் இயங்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. தற்போது சோதனை ஓட்டம் நிறைவடைந்து உற்பத்தி தொடங்கி தற்போது விநியோகப் பணிகளும் தொடங்கியுள்ளன.
இந்த பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று இரவு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. அங்கு உற்பத்தியான ஆக்சிஜனை வெளியில் கொண்டு செல்வதற்கு வசதியாக பிரத்யேக டேங்கர் லாரிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்டன. இதனையடுத்து இன்று காலை ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி தொடங்கியது.