கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு! யாரையும் போலீசார் அடிக்க வேண்டாம்! கமிஷனரின் அதிரடி பேச்சு!
Commissioner speech for police
சீனாவில் ஆரம்பித்த கொரோனோ இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக அளவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் பெரும் அச்சுறுத்தலில் உள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தலால் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தபட்டு வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர் மக்கள். கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுதைத் தடுக்கும் முயற்சியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகிறது.
இரண்டு நாட்களாக ஊரடங்கை மீறி வெளியே வரும் பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்கு போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் கொரோனாவை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டு வந்த நிலையில், பொது மக்களின் நடமாட்டம் வெளியில் அதிகம் உள்ளதாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றது.
கடந்த 2 நாட்களாக போலீசார் வெளியில் திரியும் பொதுமக்களை அடிப்பதாகவும் தடுத்து திருப்பி அனுப்புவதாகவும் தொலைக்காட்சிகளில் காணொளிகள் வெளியாகி வருகின்றது. இந்தநிலையில், காவல்துறையினருக்கு அருமையான அறிவுரைகளை எடுத்து கூறியுள்ளார் கமிஷனர் ராஜேந்திரன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், எது முக்கியம் எது முக்கியம் இல்லை என்று விவரித்துள்ளார். மருத்துவப் பொருட்கள் மட்டுமே அத்தியாவசியம் என நினைத்து இருக்க வேண்டாம். அனைத்துப் பொருட்களுமே மக்களுக்கு ஒரு விதத்தில் தேவைப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது எனவே எனவே போலீசார் சற்று கவனமாக செயல்பட வேண்டியது அவசியமாக உள்ளது.
எனவே போலீசார், கைகளில் லத்தி வைத்திருக்க வேண்டாம் என்று சென்னை கமிஷனர் ராஜேந்திரன் அறிவுரை வழங்கியுள்ளார். அவரது பேச்சு அனைவரையும் கவர்ந்த ஆடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.