கொரோனா அச்சுறுத்தல்! ஹோட்டல், டீக்கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை விடுத்த அதிரடி உத்தரவு!
Conditions to tea shop for corono awarness
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருவர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் சுத்தமாக இருக்கவும் தொடர்ந்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உணவு பாதுகாப்பு துறை தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சென்னை முழுவதும் உள்ள டீக்கடை களுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டு, பல கட்டுப்பாடுகளை விதித்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதன்படி சென்னையில் உள்ள டீக்கடையில் டீ டம்ளர்களை சோப் ஆயில் போட்டு நன்கு கழுவ வேண்டும், மேலும் டீ மாஸ்டருக்கு இருமல், காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல், நட்சத்திர உணவகங்களில் உணவு பாத்திரங்களை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும், உணவகங்கள் முழுவதும் தூய்மையாக இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.