சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவனை அடித்துக் கொன்ற காவலர்கள்.. ஆறு பேர் கைது...!
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவனை அடித்துக் கொன்ற காவலர்கள்.. ஆறு பேர் கைது...!
கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடித்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகேயுள்ள கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த கோகுல்ஸ்ரீ (17) என்ற சிறுவன் கடந்த மாதம் தாம்பரம் ரயில்வே குடியிருப்பில் உள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான பேட்டரியை திருடியதாக ரெயில்வே காவலர்கலால் கைது செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து கடந்த 29-ஆம் தேதி சிறுவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். செங்கல்பட்டில் இருக்கும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவனை அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்ட சிறுவன் கடந்த 31-ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவால் மர்மமான முறையில் உயிரிழந்தான்.
கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் உயிரிழந்ததாக சிறுவர் சீர்திருத்த பள்ளி சார்பில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து மகனின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் செங்கல்பட்டு மாவட்ட, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இந்த மனு தொடர்பாக செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரீனா விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
சிறுவர் சீர்திருத்த பள்ளியில், பணியில் இருந்த காவலர் ஆனஸ்ட்ராஜ் என்பவர் சிறுவனை அடித்துள்ளார். அப்போது சிறுவன் அவரது கையை கடித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அங்குள்ள காவலர்கள் ஆனஸ்ட் ராஜ், சரண்ராஜ், விஜயகுமார், வித்யாசாகர், மோகன் மற்றும் சந்திரபாபு ஆகிய ஆறு பேர் சேர்ந்து சிறுவனை தாக்கியதில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சறுவனை தாக்கி கொலை செய்த ஆறு பேரையும் கைது செய்து, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.