மக்காசோளத்தை குறிவைக்கும் படைப்புழுக்கள்.. தவிர்ப்பது எப்படி?.. வேளாண்துறையின் கலக்கல் ஆலோசனை.!
மக்காசோளத்தை குறிவைக்கும் படைப்புழுக்கள்.. தவிர்ப்பது எப்படி?.. வேளாண்துறையின் கலக்கல் ஆலோசனை.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை பகுதியில், பருவமழை காலங்களில் மானாவாரி மக்காசோளம் சாகுபடி செய்வது வழக்கம். நடப்பு ஆண்டிலும் மக்காசோளத்தின் மீது படைப்புழு தாக்குதல் ஆரம்பக்கட்டம் முதலாகவே கட்டுப்படுத்தப்பட வேண்டு. இதுகுறித்து வேளாண்மைத்துறையினர் தெரிவிக்கையில்,
படைப்புழு முட்டைபருவம் முதல் அந்துப்பூச்சி வரையில் 6 நிலைகள் கொண்டது. தாய் அந்துப்பூச்சி இலையின் அடியில் 150 முட்டைகள் இடும். இவ்வாறாக ஒவ்வொரு அந்துப்பூச்சியும் தனது வாழ்நாட்களில் 2000 முட்டைகளை இடுகிறது. முட்டையில் இருந்து வெளியேறும் இளம்புழுக்கள் இலையின் அடிப்பகுதியை சுரண்டி சேதத்தை ஏற்படுத்தும்.
இதனால் அடுத்தடுத்த நிலையில் குருத்து முதல் கதிர் வரையில் சேதமாகி மகசூல் இழப்பு ஏற்படும். படைப்புழுவை கட்டுப்படுத்த விதைப்புக்கு 20 நாட்களுக்கு முன்னதாக ஏக்கருக்கு 100 கிலோ அளவில் வேப்பம் புண்ணாக்கு இட்டு உழவுப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்களின் தாக்கம் இஇதனால் குறையும். தப்பித்த புழுக்கள் முட்டையிடாத வண்ணம் பாதுகாக்கும்" என்று தெரிவித்தனர்.
அதனைப்போல, கடையில் வாங்கப்படும் விதையில் பூஞ்சாணக்கொல்லி விதைநேர்த்தி செய்யப்பட்டு இருக்கும். இவ்விதையில் சையாண்டிரினில்புரோல் 19.8 எப்.எஸ் மற்றும் தயோமீதாக்சோம் 9.8 எப்.எஸ் கூட்டு மருந்தை கிலோ விதைக்கு 4 மிலி என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி விதைக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
ஊடுபயிராக வேலிமசாலையை நடுவதால், மக்காசோள விதைமுளைத்த 2 ம் நாளில் இருந்து செயல்பட தொடங்கும் அந்துப்பூச்சி, விதைப்பு சமயத்தில் ஏக்கருக்கு 5 அளவில் வைக்கப்பட்ட இனக்கவர்ச்சிபொறியால் கட்டுப்படுத்தப்படும். பிற பாதிப்புகள் ஏதேனும் இஇருப்பின் வேளாண்மைத்துறை அதிகாரிகளின் அரோசனையை பெற்று உரிய மருந்துகளை தெளிக்கலாம்.