கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை! என்ன காரணம்?
corona patient suicide
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிகையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இந்த சமயத்தில் சமீப காலமாக கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்தநிலையில் திருவேற்காடு அருகே கீழ் அயனம்பாக்கத்தில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவேற்காடு அருகே டீ கடை நடத்தி வரும் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நான்கு நாட்கள் கொரோனா முகாமில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர், மருத்துவரின் அறிவுறுத்தலின்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். இந்நிலையில், அவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து சுகாதாரத்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி தகனம் செய்யவுள்ளனர்.கொரோனா தொற்று ஏற்பட்டதால் மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் ஏற்பட்டவர்கள் மிகுந்த மனவலிமையுடன் இருக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே அனைவரும் தைரியமுடன் இருங்கள். கொரோனா பாதித்து குணமடைந்து வீடு திரும்பியவர்களிடம் பிரிவினை காட்டாதீர்கள்.