தமிழகத்தை தாக்கும் கொரோனா..! 65 பேர் இன்று பலி.. ஒரே நாளில் புதிதாக 4,231 பேருக்கு தொற்று!.. முழு விவரம் உள்ளே.!
Corono positive case death count in TN
தமிழகத்தில் இன்று மட்டும் ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி பெரும் இழப்புகளை ஏற்படுத்திவருகிறது. உலகளவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளநிலையில் பலலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்தில் இந்த வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பு விவரங்களும் நாளுக்கு நாள் தமிழக சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மட்டும் தமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை 1,765 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 65 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,216 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது.