இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் உயர்ந்த கொரோனா..! தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு பாதிப்பு.!
Corono tamilnadu latest count update
தமிழகத்தில் இன்று மட்டும் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் சமீப காலமாக தமிழகத்திலும் நாளுக்கு நாள் பலமடங்கு அதிகரித்துவருகிறது. நேற்றுவரை 3023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தநிலையில், இன்றுமட்டும் கூடுதலாக 527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3023லிருந்து 3550 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இன்று 30 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை 1,430 பேர் குணமடைந்து வீட்டிற்க்கு சென்றுள்ளன்னர்.