சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளுக்கு செல்லவந்த 18 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி.!
சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளுக்கு செல்லவந்த 18 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி.!
உலகத்தையே அச்சுறுத்திய கொரோனாவால் உலகின் பல நாடுகளில் பலர் பலியாகினர். தற்போது கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தநிலையில், கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸாக உருமாறி பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தநிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் அணைத்து பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிற நாடுகளுக்கு செல்லும் அவர்கள் விமானத்தில் ஏறுவற்கு 6 மணி நேரத்துக்கு முன்பு ரேபிட் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என சான்றுடன் வந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து தோகா, சார்ஜா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வந்தவா்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. செய்யப்பட்ட ரேபிட் பரிசோதனையில்18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கொரோனா தொற்று உறுதியான 18 பயணிகளின் விமான பயணத்தை விமான நிலைய அதிகாரிகள் ரத்து செய்தனர். இதனையடுத்து கொரோனா தொற்று பாதிப்பிற்குள்ளான 18 பேரையும் சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வாா்டுக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் நடந்த ரேபிட் பரிசோதனையில் 18 பயணிகளுக்கு தொற்று கண்டு பிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.