கள்ளகாதலனால் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. கட்டிவைத்து நொறுக்கியெடுத்த மக்கள்., பரபரப்பு சம்பவம்.!
கள்ளகாதலனால் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. கட்டிவைத்து நொறுக்கியெடுத்த மக்கள்., பரபரப்பு சம்பவம்.!
கள்ளக்காதலி வீட்டிற்கு சென்று தகராறு செய்த கள்ளக்காதலன், கள்ளகாதலியின் கழுத்தை அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில், மாமங்கலம் பகுதியை சார்ந்தவர் செல்வி. அங்குள்ள புத்தூர் பகுதியை சார்ந்தவர் திருநாவுக்கரசு. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து, கள்ளக்காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில், கடந்த 7 வருடமாக கள்ளக்காதல் உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த திருநாவுக்கரசு, செல்வியின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். வாக்குவாதத்தின் போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திருநாவுக்கரசு செல்வியின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதனால் படுகாயமடைந்த செல்வியை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த நிலையில், திருநாவுக்கரசை பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து அடித்து நொறுக்கி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.