17 வயது சிறுமிக்கு தாலிகட்டி, போக்ஸோவில் கைதான காதலன்... கடலூரில் சம்பவம்.!!
17 வயது சிறுமிக்கு தாலிகட்டி, போக்ஸோவில் கைதான காதலன்... கடலூரில் சம்பவம்.!!
18 வயது பூர்த்தியாகாத கல்லூரி மாணவியை திருமணம் செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவிரி பகுதியை சார்ந்த இளைஞர் மணி பாலா. இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியை சார்ந்த 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாக தெரியவருகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறிய மணி பாலா, அவரை கடலூருக்கு அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் மகளை காணாது தேடி அலைந்த நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியை தேடி வருகையில் அவருக்கு குழந்தை திருமணம் நடந்தது உறுதியானது. இதனையடுத்து, மணிபாலாவை கைது செய்த காவல் துறையினர், போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர். சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.