கடப்பாரையுடன் சென்று வரியை வசூல் செய்யும் கடலூர் மாநகராட்சி.. பதறும் மக்கள்.!
கடப்பாரையுடன் சென்று வரியை வசூல் செய்யும் கடலூர் மாநகராட்சி.. பதறும் மக்கள்.!

கடலூர் நகராட்சி மாநகராட்சியாக மாறியதைத்தொடர்ந்து, நிதிச்சிக்கலை தீர்க்க நிர்வாகிகள் பலவிதமான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மாநகராட்சிக்கு வரி செலுத்த தவறினால், குடிநீர் இணைப்பை துண்டிப்பது, வீட்டின் முன்பு பள்ளம் தோண்டுவது என செயல்படுகின்றனர்.
வரிபாக்கி
இதனால் மார்ச் 31 வரையில் அவகாசம் இருந்தபோதிலும், அதிகாரிகள் மக்களை துன்புறுத்துவதாக புகார் எழுந்து வருகிறது. வரிப்பாக்கி உடையோரின் வீட்டுக்கு கடப்பாரை கொண்டு சென்று மிரட்டல் விடுக்கும் சம்பவமும் நடந்து வருகிறன்றன.
இதையும் படிங்க: 13, 14 வயது சிறுமியை விபசாரத்தில் தள்ளி சீரழித்த தம்பதி; கள்ளக்காதல் அம்பலமானதால், தன்னை காப்பாற்ற நடந்த கொடுமை.!
கடப்பாரையுடன் பயணம்
மேலும், பல இலட்சம் வரி பாக்கி வைத்துள்ள நபர்களின் வீட்டுக்கு செல்லாமல், அப்பாவி பொதுமக்களை வஞ்சிப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில், கடப்பாரை கொண்டு வீட்டின் முன்பு மாநகராட்சி அதிகாரிகள் வரி செலுத்த எச்சரிக்கை விடும் காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: 12ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்; டியூசன் சென்டரில் அதிர்ச்சி.. 3 குழந்தைகளின் தந்தை கைது.!