கள்ளக்காதல்களால் நேர்ந்த சோகம்.. சுடுகாட்டுக்குள் துள்ளத்துடிக்க இளைஞர் கொலை.. டூயல் சிம் அம்முனியால் பரிதாபம்.!
கள்ளக்காதல்களால் நேர்ந்த சோகம்.. சுடுகாட்டுக்குள் துள்ளத்துடிக்க இளைஞர் கொலை.. டூயல் சிம் அம்முனியால் பரிதாபம்.!
இன்ஸ்டாகிராம் அழகி கணவரை பிரிந்து இரண்டு பேருடன் தொடர்பில் இருந்த நிலையில், இறுதியில் நடந்த தகராறில் நடந்த படுகொலை பண்ரூட்டியை அதிரவைத்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, தட்டாஞ்சாவடி காந்தி நகர் காலனியில் வசித்து வருபவர் சக்திவேல். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். திருமணமான இவர், தட்டாஞ்சாவடி காளிகோவில் சுடுகாடு பகுதியில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த புதுப்பேட்டை காவல் துறையினர், சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ரூட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிந்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராம் காதலிற்காக சக்திவேல் நண்பரால் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. அதாவது, பண்ரூட்டியை சேர்ந்த பூமிகா ஈன்ற திருமணமான பெண், அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் அழகி போல் சித்தரித்து பாடல் பாடி பதிவிட்டு வந்துள்ளார். இந்த தகவல் அவரின் கணவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, இருவரும் ஒருகட்டத்தில் பிரிந்துள்ளனர்.
அப்போது, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பூமிகாவுக்கும் - சக்திவேலுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிகா பண்ரூட்டியில் செயல்பட்டு வரும் பேக்கரியில் பணியாற்றி வருகையில், அவரை ஆட்டோவில் சக்திவேல் பிக்கப் & டிராப் செய்து வந்துள்ளார். இதற்கிடையில், சக்திவேலின் நண்பர் சுமனும் பூமிகாவின் இன்ஸ்டாகிராம் கணக்கை பார்த்துள்ளார். அவரும் பூமிகாவின் அழகில் சொக்கிப்போக, அவ்வப்போது அவருக்கு தொடர்பு கொண்டும் பேசியுள்ளார். சுமனின் பேச்சுக்கள் பூமிகாவை கவர, இருவரும் அவ்வப்போது சந்தித்து வந்துள்ளனர். ஆனால், பூமிகா சக்திவேலுடன் கொண்ட பழக்கத்தை கைவிடவில்லை.
சக்திவேல் விவகாரம் சுமனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே, நண்பரை கண்டித்தாலும் பலனில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுமன் சக்திவேலை கொலை செய்ய திட்டம்தீட்டி, சம்பவத்தன்று தனது கூட்டாளிகள் உதவியுடன் சக்திவேலை காளிகோவில் சுடுகாட்டுக்கு மதுபானம் அருந்த அழைத்து சென்று தீர்த்துக்கட்டியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சுமன், வசந்தகுமார், குணா ஆகியோரை கைது செய்தனர். பூமிகாவுக்கு வலைவீசப்பட்டுள்ளது.