தூக்கில் தொங்கி உயிரைவிட்ட 9 மாத கர்ப்பிணி பெண்; காதல் திருமணம் செய்து ஒரே ஆண்டில் நடந்த சோகம்.!
தூக்கில் தொங்கி உயிரைவிட்ட 9 மாத கர்ப்பிணி பெண்; காதல் திருமணம் செய்து ஒரே ஆண்டில் நடந்த சோகம்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, மாளிகம்பட்டு தெற்கு தெருவில் வசித்து வருபவர் முத்து (வயது 27). கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இதே பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரின் மகள் செல்வகுமாரி (வயது 21). தம்பதிகள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளனர்.
இருவரும் ஒன்றாக வசித்து வரும் நிலையில், செல்வகுமாரி 9 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அடுத்த வாரத்தில் அவருக்கு வளைகாப்பு விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் வீட்டில் தனியே இருந்த செல்வகுமாரி, தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக பண்ரூட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு செல்லும் வழியிலேயே செல்வகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக பண்ரூட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோட்டாட்சியர் விசாரணையும் நடந்து வருகிறது.