மின்பழுதை சரிசெய்ய முயன்ற மின்வாரிய ஊழியர் டிரான்ஸ்பார்மரிலேயே மின்சாரம் தாக்கி உயிரிழப்பு; அலட்சியத்தால் நடந்த சோகம்.!
மின்பழுதை சரிசெய்ய முயன்ற மின்வாரிய ஊழியர் டிரான்ஸ்பார்மரிலேயே மின்சாரம் தாக்கி உயிரிழப்பு; அலட்சியத்தால் நடந்த சோகம்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிகுப்பம் பகுதியை சேர்ந்த மின்சார ஊழியர் முருகன். இவர் நேற்று விடுமுறையில் இருந்துள்ளார். ஆனால், உள்ளூரில் ஏற்பட்ட மின்தடையை சரி செய்ய முருகனை பொதுமக்கள் அழைத்திருத்த நிலையில், அவர் டிரான்ஸ்பார்மரில் மின்சாரத்தை துண்டித்து பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், டிரான்ஸ்பரில் 3 லைன்கள் செல்லும் நிலையில், முருகன் மின்சாரத்தை துண்டித்தபோது 2 லைன்கள் ஆப் ஆகி இருக்கிறது. ஆனால், ஒரு லைன் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. எர்த் ராடும் இணைக்கப்படவில்லை.
இதனால் லைனில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதா? என்பதை சரியாக சோதிக்காமல், எர்த் ராடு இணைக்காமல் பழுதை சரிசெய்ய முருகன் டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய நிலையில், அவரின் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியாகினர்.
டிரான்ஸ்பார்மர் மீது சாய்ந்தவாறு அவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு உதவி செய்ய எண்ணி மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற விபத்து நடந்ததாகவும் உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். விபத்துகள் எங்கும் இயல்பாகிவிட்ட காலத்தில், நமது உயிரை நாம்தான் பொறுப்புடன் பாதுகாக்க வேண்டும்.
அலட்சியம் வேண்டாம் மின்வாரிய சொந்தங்களே., கவனமாக இருங்கள்.