×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கஞ்சா போதையில் இருந்த 11 பேர் கும்பலால் நடுரோட்டில் இளைஞர் அடித்தே கொலை.. கடலூர் அருகே பதற்றம்.. பரபரப்பு சம்பவம்.!

கஞ்சா போதையில் இருந்த 11 பேர் கும்பலால் நடுரோட்டில் இளைஞர் அடித்தே கொலை.. கடலூர் அருகே பதற்றம்.. பரபரப்பு சம்பவம்.!

Advertisement

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வாலிபரை 10 பேர் கொண்ட கஞ்சா கும்பல் அடித்தே கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம், கூடலூர் கிராமத்தில் வசித்து வருபவர் உதயராஜா (வயது 28). பெண்ணாடம் கருங்குழித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பாபு (வயது 30). இருவரும் நண்பர்கள். நேற்று மாலை 06:00 மணியளவில் பெண்ணாடம் புதிய பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டு இருந்துள்ளனர். 

அப்போது, அங்கு வந்த தொளார் கிராமத்தை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட கும்பல், கஞ்சா போதையில் கட்டை மற்றும் கற்களால் உதயராஜா மற்றும் ஆனந்த்பாபுவின் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இருவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடியுள்ளனர். இந்த தாக்குதலை கண்டு அதிர்ந்துபோன மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரையும் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், உதயராஜா பரிதாபமாக உயிரிழந்தார். ஆனந்த்பாபு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். இதில், உதயராஜா சிவில் எஞ்சினியர் ஆவார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தொளார் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பவல்லி. 

இவருக்கும், தர்மராஜ் எனபவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பழக்கம் இருந்துள்ளது. தர்மராஜ் பெண்ணிடம் சமீபத்தில் ரூ.5 ஆயிரம் கொடுத்திருந்த நிலையில், அதனை திரும்பி கேட்டுள்ளார். அப்போது, புஷ்பவல்லிக்கு தெரிந்த ஆனந்தராஜ் என்பவர் பணத்தை நான் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், பணம் கூறியபடி திரும்ப தரவில்லை.

இதுகுறித்து தர்மராஜுக்குக்கும் - ஆனந்த்பாபுவிற்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், நேற்று மாலை தர்மராஜ் தனது நண்பர் உதய ராஜாவுடன் பெண்ணாடம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, ஆனந்தராஜ் தனது தரப்பு ஆட்கள் என 11 பேர் கும்பலை கூட்டி வந்து கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், உதயராஜா தர்மராஜ் தாக்கப்படுவதை தடுக்க முயற்சிக்கையில் கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலை அரங்கேற்றிய கும்பல் மின்னல் வேகத்தில் தப்பி சென்ற நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக கவலை துறையினர் 7 பேரை கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளி 4 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது. இந்த 11 பேர் கும்பலில் 3 சிறார்களும் உள்ளன.

நிகழ்விடத்தில் மோதல் சம்பவத்திற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், இருதரப்பு மோதலினை கட்டுப்படுத்த காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cuddalore #Pennadam #man #death #Murder #police #Investigation #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story