சவூதி சென்று ஒட்டகம் மேய்த்த தையல்காரர்.. 24 ஆண்டாக கையில் பதாகையுடன் மக்களுக்கு விழிப்புணர்வு..!
சவூதி சென்று ஒட்டகம் மேய்த்த தையல்காரர்.. 24 ஆண்டாக கையில் பதாகையுடன் மக்களுக்கு விழிப்புணர்வு..!
தமிழகத்தில் இருந்து சவூதி வேலை என சென்று ஒட்டகம் மேய்த்தவர், முதியவர் ஆகியும் மக்களுக்கு விழிப்புணவை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியை சேர்ந்த முதியவர் கையில் "24 ஆம் ஆண்டு துவக்கம். நான் வெளிநாட்டில் ஆடு மேய்த்தவன்" என்ற பதாகையுடன் வலம்வந்தார். அவரிடம் என்ன நடந்தது என்பது தொடர்பாக கேட்கையில் தனது வெளிநாட்டு வாழ்க்கை அனுபவம் தொடர்பாக பகிர்ந்துகொண்டார்.
அதாவது, கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்னதாக திட்டக்குடியில் டெய்லராக பணியாற்றி வந்தவர், குடும்ப வறுமை மற்றும் முன்னேற்றத்திற்காக சவூதி அரேபியா சென்றுள்ளார். இதற்காக ரூ.70 ஆயிரம் கடன் வாங்கி ஏஜெண்டுக்கு கொடுத்து சவூதி சென்றுள்ளார்.
அங்கு வேலைக்கு அழைத்து சென்றவர்கள் ஒட்டகம் மேய்க்க அழைத்து சென்றுள்ளனர். அதுவரை ஆடு, மாடு கூட மேய்த்திடாத அவருக்கு நாளொன்றுக்கு 10 கி.மீ ஒட்டகத்தை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வர வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அவரின் பாஸ்போர்ட்டும் வாங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்திற்கு சரியான உணவும் சாப்பிட முடியாமல் தவித்து 3 ஆண்டு ஒப்பந்தம் முடிந்து திரும்ப வந்துள்ளது. மேலும், 3 ஆண்டுகளாக டீ குடிக்க கூட 10 ரூபாய் கொடுக்காத உரிமையாளர், விசா காலம் முடிந்ததும் 2 விசா தருகிறேன், ஊருக்கு சென்று இன்னும் 2 பேரை அழைத்து வா. நீயும் நன்றாக சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இந்த நாளினை தனது வாழ்நாட்களின் கரும்புள்ளியாக எடுத்துக்கொண்ட முதியவர், அதனை மறக்காமல் ஆண்டுதோறும் மக்களுக்கு விழிப்புணர்வாக ஏற்படுத்தி வருகிறார். வெளிநாட்டு வேலைகளில் பல ஏமாற்றங்கள் இருப்பது அன்றில் இருந்து இன்று வரை தொடர்கதையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.