மின்சாரம் தாக்கிய 4 வயது மகளை காப்பாற்ற சென்றதில் சோகம்; தாய்-தந்தை, மகள் என 3 பேர் பரிதாப பலி.!
மின்சாரம் தாக்கிய 4 வயது மகளை காப்பாற்ற சென்றதில் சோகம்; தாய்-தந்தை, மகள் என 3 பேர் பரிதாப பலி.!
மின் ஒயர் அறுந்து கிடந்ததை கவனிக்காமல் விளையாட சென்ற சிறுமி உட்பட 3 பேர் பலியாகினர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், ராசாப்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வீரமணி. இவரின் மனைவி சௌரியம்மாள். இந்த தம்பதியின் மகள் வினிதா (வயது 4).
சிறுமி நேற்று வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், மழையால் சேதமடைந்த மின் ஒயர் துண்டாகி கிடந்துள்ளது. இதனை கவனிக்காத சிறுமி மின் ஒயரை மிதித்து மின்சாரத்தால் தாக்கப்பட்டுள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் - தந்தை ஆகியோர் மகளை காப்பாற்ற எண்ணி எடுத்த முயற்சியும் பலனின்றி, மூவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் குழந்தை, தாய், தந்தை ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.