×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய தம்பதியினர்.! வசதியாக வாழ்ந்தவர்களுக்கு இப்படியொரு துயரமா? வெளியான பகீர் காரணம்!

cuople dead for money issue

Advertisement

சென்னை ஓட்டேரி பகுதியில் வசித்து வந்தவர் சந்திரன். இவர் பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர். மேலும் ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்து வந்த இவர் கடன் அதிகமாக இருந்த நிலையில் தனது சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஹரிபிரசாத் மற்றும் ராதிகா என இருபிள்ளைகள் உள்ளனர்.இருவருமே திருமணமாகி தனித்தனியாக வசித்து வந்தநிலையில், சந்திரனும்,  விஜயலட்சுமியும் தனியாக வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் அவர்களது வீட்டில் வேலை செய்யும் சித்ரா என்ற பெண் எப்பொழுதும் போல வேலைக்காக சென்றுள்ளார். ஆனால் அங்கு வீட்டின் கதவுகள் திறந்த நிலையில் இருந்துள்ளது. அதனை கண்டதும் சந்தேகமடைந்த அவர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு விஜயலட்சுமி மற்றும் சந்திரன் இருவரும் ஒரே நாளில் கயிற்றில் தூக்குப்போட்டு தொங்கியுள்ளார் .

இதனை கண்டு சித்ரா அலறியுள்ளார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த இடத்தில் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.

 அதில் நான் நிறைய கடன் வாங்கி விட்டேன். கடனுக்கு வட்டி மட்டுமே மாதம் ஒரு லட்சத்திற்கு மேல் வந்து விட்டது. இனி என்னால் வட்டி, அசல் இரண்டையும் தர முடியாது எனவே விரக்தியோடு நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம் என எழுதியுள்ளார் மேலும் எங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் இது குறித்து எனது மகள் மற்றும் மகனிடம் கேட்டு தொல்லை கொடுக்க வேண்டாம் எனவும் உருக்கமாக கேட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dead #money issue
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story