×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணமான பெண்ணுடன் ஓட்டம்பிடித்த இளைய மகன்.! அவமானம் தாங்காமல் மூத்த மகனுடன் தந்தை எடுத்த விபரீத முடிவு.!

திருமணமான பெண்ணை காதலித்து ஓட்டம்பிடித்த இளைய மகன் செயலால் அவமானம் தாங்காமல் மூத்த மகனுடன் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள களங்காணி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு சங்கர்(25), கிருஷ்ணன் (21) என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் சுப்பிரமணி சேந்தமங்கலம் அருகே முத்துகாப்பட்டியில் தனது மூத்த மகன் சங்கருடன் தங்கி அங்குள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளார்.

சுப்பிரமணியின் இளைய மகன் கிருஷ்ணன் அடிக்கடி அந்த செங்கல் சூளைக்கு தந்தையை பார்க்க வந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த சேலத்தை சேர்ந்த பாஸ்கரின் மனைவி சத்யா என்பவருடன் கிருஷ்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 

இவர்களது பழக்கம் சத்யாவின் கணவர் பாஸ்கருக்கு தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணனின் தந்தை சுப்பிரமணியிடம் பாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சத்யா-கிருஷணன்இருவரும் சேர்ந்து தலைமறைவாகிவிட்டனர். இதனையடுத்து பாஸ்கர் தனது மனைவியைக் கண்டுபிடித்து தருமாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதனையடுத்து, கிருஷ்ணனின் தந்தை சுப்பிரமணி மற்றும் அண்ணன் சங்கர் ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இளையமகன் செய்த காரியத்தை அவமானமாக கருதிய சுப்பிரமணி, மூத்த மகன் சங்கருடன் அவர்கள் வேலை பார்த்துவந்த செங்கல் சூளை அருகிலுள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களது உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #illegal love
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story