"சார்...அவன் என் பொண்டாட்டிக்கூட..." கள்ளத் தொடர்பு விவகாரத்தில் உறவினரை தீர்த்து கட்டிய கட்டிட தொழிலாளி.!
சார்... அவன் என் பொண்டாட்டிக்கூட... கள்ளத் தொடர்பு விவகாரத்தில் உறவினரை தீர்த்து கட்டிய கட்டிட தொழிலாளி.!
சென்னையில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருக்குமா என்ற சந்தேகத்தில் உறவினரை கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினருத்திவீரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த பெருங்குடி ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் விஜயகாந்த்(37). இவருக்கு திருமணமாகி ரேணுகா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரேணுகாவின் உறவினரான தர்மபுரியை சேர்ந்த ராஜீவ் காந்தி என்ற நபர் இவர்களது வீட்டிற்கு வந்து தங்கி இருக்கிறார். அங்கிருந்து கட்டிட வேலைகளுக்கு சென்று வந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதியிலிருந்து ராஜீவ் காந்தியை காணவில்லை. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையில் விசாரணை நடத்தி வந்தது. அப்போது பெருங்குடி ஏரியில் வாலிபர் ஒருவரின் சடலம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர். காவல்துறையின் விசாரணையில் ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட நபர் ராஜீவ் காந்தி என்று தெரிய வந்தது. மேலும் அவரது கழுத்துப் பகுதியில் காயம் ஒன்றும் இருந்திருக்கிறது.
இது தொடர்பாக சந்தேகமடைந்த காவல்துறையினர் விஜயகாந்த் அழைத்து விசாரித்ததில் ராஜீவ் காந்தியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். திருமணமாகி ஊரில் சுற்றி திரிந்த ராஜீவ் காந்தியை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு அழைத்து வந்ததாக தெரிவித்தார். சில நாட்கள் ஒழுங்காக வேலைக்கு சென்று வந்த ராஜீவ் காந்தி அதன் பிறகு மது அருந்திவிட்டு சுற்றித்திரிந்ததாக தெரிவித்தார். மேலும் அவருக்கும் தனது மனைவிக்குமிடையே கள்ளத்தொடர்பு இருக்குமா.? என்ற சந்தேகம் தனக்கு ஏற்பட்டதாக தெரிவித்த விஜயகாந்த். இதனால் ராஜீவ் காந்தியுடன் அடிக்கடி தகராறு ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். கடந்த 16ஆம் தேதி அன்று ஏரிக்கரையில் ராஜீவ் காந்தியுடன் மது அருந்திய போதும் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக தெரிவித்த அவர் ஆத்திரத்தில் ராஜீவ் காந்தியின் கழுத்தில் குத்தி அவரை ஏரியில் தள்ளி கொலை செய்ததாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை சிறையில் அடைத்தது.