அடடா.. ஊக்கத்தொகையுடன் அழைப்பு விடுக்கும் தமிழக அரசு.. ஆண்களுக்கு இலவச கருதடை அறுவை சிகிச்சை.. முந்துபவர்களுக்கே முன்னுரிமை.!
அடடா.. ஊக்கத்தொகையுடன் அழைப்பு விடுக்கும் தமிழக அரசு.. ஆண்களுக்கு இலவச கருதடை அறுவை சிகிச்சை.. முந்துபவர்களுக்கே முன்னுரிமை.!
பெண்களுக்கு செய்யப்படும் குடும்ப நல அறுவை சிகிச்சை விட ஆண்களுக்கு செய்யப்படும் குடும்ப நல அறுவை சிகிச்சை மிகவும் எளிதானது. ஆனால் தமிழகத்தில் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தகுதியுள்ள ஆண்கள் பல பேர் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ள முன்வருவதில்லை.
இருப்பினும் ஆண்களுக்கான அறுவை சிகிச்சைக்கு ஆண்டுதோறும் அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதன்படி அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை தமிழகம் முழுவதும் 7000 பேருக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை 1,304 பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதற்காக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆண்களுக்கு இலவச குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கான முகாம்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட மருத்துவ ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனர் பொறுப்பு சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் 22 முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை வார விழா கடைபிடிக்கப்படுவதினால் டிசம்பர் 4ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இலவசமாக செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு தமிழக அரசின் ஊக்கத்தொகையாக நபர் ஒருவருக்கு 1,100 வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.