தீயணைப்பு & மீட்பு படையினருக்கு தீபாவளி விடுமுறை கிடையாது; அனைவரும் பணியில் இருக்க உத்தரவு.!
தீயணைப்பு & மீட்பு படையினருக்கு தீபாவளி விடுமுறை கிடையாது; அனைவரும் பணியில் இருக்க உத்தரவு.!
உலகெங்கும் உள்ள இந்து மக்களால், தீபஒளிப் பண்டிகையானது நவம்பர் 14ம் தேதி சிறப்பிக்கப்படவுள்ளது. இந்த பண்டிகையையொட்டி ஒவ்வொரு குடும்பமும் புத்தாடை, பட்டாசுகள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது.
தலைநகர் சென்னையில் குவியும் மக்கள் வெள்ளத்தினை கருத்தில் கொண்டு, 18 ஆயிரம் பாதுகாப்பு படையினர் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட களமிறக்கப்பட்டுள்ளனர்.
நடப்பு ஆண்டில் தீபஒளிப்பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருகிறது என்பதால், திங்கட்கிழமையும் விடுமுறை வேண்டும் என பலதரப்பில் இருந்து கோரிக்கை எழுந்ததையடுத்து, அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள தீயணைப்பு & மீட்புப்படையினருக்கு தீபஒளி மற்றும் தீபஒளிக்கு முந்தைய நாள் & பிந்தைய நாளில் விடுமுறை கிடையாது. அனைவரும் பணியில் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 8 ஆயிரம் தீயணைப்பு படை வீரர்கள் அன்றைய நாட்களில் விடுப்பு இன்றி பணியில் இருப்பார்கள்.