மக்களே உஷார்.. அச்சத்தில் கடலூர் மக்கள்..! ஆட்டத்தை ஆரம்பித்த டெங்கு அரக்கன்.!
மக்களே உஷார்.. அச்சத்தில் கடலூர் மக்கள்..! ஆட்டத்தை ஆரம்பித்த டெங்கு அரக்கன்.!
மழைக்காலம் ஆரம்பித்தாலே டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழப்பது நடந்து வருகிறது. சமீப காலமாக தடுப்பூசிகளின் உதவியுடன் பலரும் இதுபோன்ற நோய்களிலிருந்து தப்பித்து வரும் நிலையில், தற்போது டெங்கு காய்ச்சல் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சென்னையில் டெங்கு பாதிப்பால் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில், தற்போது கடலூர் மாவட்டத்தில் இரண்டு ஆண்கள் மற்றும் நான்கு பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இப்படி டெங்கு பாதிப்புக்கு உள்ளான நபர்களுக்கு தனி வார்டு இல்லாமல் மற்ற பொது வார்டு மக்களுடன் இவர்களை அனுமதித்து இருப்பதால் அருகில் இருக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். மேலும், டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு தனி வார்டு அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.