குழந்தை திருமணம் நடந்த சிறுமியை மிரட்டி சீரழித்த காவலர்: வேலியே பயிரை மேய்ந்த பயங்கரம்.!
குழந்தை திருமணம் நடந்த சிறுமியை மிரட்டி சீரழித்த காவலர்: வேலியே பயிரை மேய்ந்த பயங்கரம்.!
கல்லூரிக்கு சென்று எதிர்கால வாழ்க்கையை கட்டமைக்க வேண்டிய நேரத்தில் நடந்த திருமணம், 17 வயது சிறுமியின் வாழ்க்கையில் ஏற்படுத்திய துயரத்தை நீக்கும் வகையில் வந்த காவலரே அத்துமீறிய கொடுமையை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், ஏரியூர் சிங்கிலிமேடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 28). ஓசூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமிக்கு, 2020ம் ஆண்டு 17 வயது ஆகியுள்ளது.
சிறுமிக்கு 17 வயதில் குழந்தை திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது 2 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக சிறுமிக்கும் - மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் சிறுமி ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை அதே காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்த சகாதேவன் (வயது 55) என்பவர், விசாரணை அதிகரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை என்ற பெயரில் சிறுமியின் செல்போன் நம்பரை பெற்றுக்கொண்டவர், சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின் இதனை காரணமாக வைத்து பலாத்காரம் தொடர்ந்துள்ளது.
இந்த விவகாரம் சிறுமியின் கணவர் பழனிசாமிக்கு இடையே தெரியவரவே, கணவன் - மனைவி சண்டை உண்டாகியுள்ளது. இதனிடையே, கணவர் தன்னை கொடுமை செய்வதாக உதவி மையத்திற்கு சிறுமி புகார் தெரிவித்துள்ளார்.
இதனால் அவர் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சகாதேவன் இதனை தனக்கு சாதகமாக்கவே, சிறுமியை திருமணம் செய்த பழனிச்சாமி மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
குழந்தைகளுடன் காப்பகத்தில் இருந்த சிறுமி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சகாதேவனின் கொடூரத்தையும், அவர் தன்னிடம் பலமுறை தகாத முறையில் நடந்த அவலத்தையும் தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்த குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், நீதிமன்றத்தின் உதவியுடன் நீதிபதியிடம் வாக்குமூலம் அளிக்க வைத்தனர். இதனையடுத்து, சகாதேவன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.