8 வயதில் மாயமான மகள் 21 ஆண்டுகள் கழித்து கிடைத்த நெகிழ்ச்சி சம்பவம்; ஆரத்தழுவி, ஆனந்த கண்ணீரில் நெகிழ்ந்த குடும்பம்.!
8 வயதில் மாயமான மகள் 21 ஆண்டுகள் கழித்து கிடைத்த நெகிழ்ச்சி சம்பவம்; ஆரத்தழுவி, ஆனந்த கண்ணீரில் நெகிழ்ந்த குடும்பம்.!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், கெண்டயனஅள்ளி புதூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரின் மனைவி மாதம்மாள். தம்பதியின் மகள் ரம்யா, மாற்றுத்திறன் கொண்ட பெண்மணி ஆவார்.
கடந்த 2002-ல் ரம்யாவுக்கு 8 வயதில், பள்ளியின் சார்பில் குழந்தைகள் அனைவரும் இரயிலில் மைசூர் நகருக்கு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு இரயில் பயணத்தின்போது ரம்யா காணாமல் போனார்.
அவரை எங்கு தேடியும் காணவில்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை. இந்நிலையில், தர்மபுரியை சேர்ந்த ரம்யா, புனேவில் இருப்பது தெரியவந்தது.
இந்த தகவல் வெங்கடாசலத்தின் வாட்சப் எண்ணுக்கு தகவலாக கிடைக்கவே, தர்மபுரி மாவட்ட காதுகேளாதோர் நலச்சங்க அதிகாரிகள் புனேவுக்கு சென்று ரம்யாவை பத்திரமாக மீட்டனர்.
அவர் தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறுமியாக மயமான மகள் வளர்ந்து 21 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் பெற்றோர் ஆனந்த கண்ணீர் விட்டனர்.