திண்டுக்கல் சுங்கச்சாவடி சூறையாடல் விவகாரம்; பொதுமக்கள், விவசாயிகள் என 300 பேர் மீது திருட்டு., + வழக்குப்பதிவு.!
திண்டுக்கல் சுங்கச்சாவடி சூறையாடல் விவகாரம்; பொதுமக்கள், விவசாயிகள் என 300 பேர் மீது திருட்டு., + வழக்குப்பதிவு.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு, லட்சுமிபுரம் பகுதியில், திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. பகுதியளவு பணிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், லட்சுமிபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடி, நேற்று முதல் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
சுங்கச்சாவடி சூறையாடல்
அதன்படி, நேற்று காலை 8 மணிமுதல் சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. சாலை பணிகளை உரிய முறையில் முடிக்காமல், சுங்கச்சாவடி செயல்படக்கூடாது என உள்ளூர் மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு வரும் அன்று போரட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டு, போராட்டத்தின் பேரில் சுங்கச்சாவடிசூறையாடப்பட்டது.
இதையும் படிங்க: குரங்கை கொன்று சமைத்து சாப்பிட்ட தொழிலாளி; திண்டுக்கல்லில் பகீர் சம்பவம்.!
காவல்துறை வழக்குப்பதிவு
இந்நிலையில், 300 க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத விவசாயிகள், பொதுமக்கள் மீது பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியது, கணினிகள் திருடப்பட்டது, கொலை மிரட்டல் விடுதல், பொருட்களை திருடி செல்லுதல் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: கலியுகத்திலும் இப்படி ஒரு அரிச்சந்திரன்.. பயணியின் 3 சவரன் நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்.!