×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சந்தேகத்தால் சிதைந்துபோன குடும்பம் : மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்று சரணடைந்த கணவன்..!

சந்தேகத்தால் சிதைந்துபோன குடும்பம் : மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்று சரணடைந்த கணவன்..!

Advertisement

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தான் காவல் நிலையத்தில் சரணடைந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு, குண்ணுவாரன்கோட்டை கிராமத்தை சார்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 46). இவரின் மனைவி அஞ்சுலட்சுமி (வயது 36). இவர்கள் இருவரும் செங்கல் காளவாசலில் பணியாற்றி வருகிறார்கள். 

தம்பதிகளுக்கு மகன், மகள் என 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், செல்லப்பாண்டிக்கு தனது மனைவி அஞ்சுலட்சுமியின் மீது நடத்தை சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இருவருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை எழுவது வழக்கம். 

இந்த நிலையில், நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட, ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை சித்து, வீருவீடு காவல் நிலையத்திற்கு சென்று விஷயத்தை கூறி சரணடைந்தார். 

சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் செல்லப்பாண்டியன் வீட்டிற்கு சென்று அஞ்சுலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செல்லப்பாண்டியனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dindigul #Vathalagundu #Murder #death #police #Investigation #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story