இந்து கடவுள்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டனர் என பாடமெடுத்த ஆசிரியர்.! பொங்கி எழுந்த மாணவர்கள்.!
இந்து கடவுள்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டனர் என பாடமெடுத்த ஆசிரியர்.! பொங்கி எழுந்த மாணவர்கள்.!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஜிதேந்திர குமார் என்ற பேராசிரியர் பணியாற்றிவருகிறார். இவர் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக வகுப்பில் நடந்துகொண்டதாக கூறி மாணவர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக அவர் பாடம் எடுக்கையில், இந்து கடவுளான பிரம்மா, இந்திரன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர் என்று பாடம் எடுத்துள்ளதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக வகுப்பில் நடந்துகொண்டதாக கூறி மாணவர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் கல்வி நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்ததையடுத்து பேராசிரியரை இடை நீக்கம் செய்துள்ள நிர்வாகம், பேராசிரியருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளை பல்கலைக்கழகம் ஒருபோதும் ஏற்காது. இது தொடர்பாக பேராசிரியர் 24 மணிநேரத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இதை விசாரிக்க இரு நபர் கமிட்டி ஒன்றை நியமித்துள்ளோம். பேராசிரியர் ஜிதேந்திர குமார் சம்பவம் தொடர்பாக நிபந்தனை அற்ற மன்னிப்பு கோரியுள்ளார் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.