தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு எப்போது தெரியுமா?
Diwali special bus reservation
தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளியை கொண்டாடப்படுகிறது இதை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் வெவ்வேறு இடங்களில் இருந்து செல்ல போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைக்கிறார்.
தீபாவளிக்காக போக்குவரத்துறை சார்பில் 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் பேருந்து நிலையங்களில் இருந்து இன்று முதல் 26ம் தேதி வரை 4 ஆயிரத்து 265 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு மையங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் இன்று தொடக்கி வைக்கிறார்.