ஆத்தி!! பார்க்கவே பயமா இருக்கே.. கடனை திருப்பி கேட்டவரை அரிவாளுடன் துரத்திய நபர்.. வைரல் வீடியோ..
ஆத்தி!! பார்க்கவே பயமா இருக்கே.. கடனை திருப்பி கேட்டவரை அரிவாளுடன் துரத்திய நபர்.. வைரல் வீடியோ..
கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை அருவாளை எடுத்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தெற்கு தத்தமங்கலத்தை சேர்ந்தவர் நித்யா. திமுக ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவரது கணவர் பெயர் வெற்றிச்செல்வன். கன்னியாபட்டியில் டாஸ்மாக் பார் நடத்திவருகிறார். இந்நிலையில் வெற்றிச்செல்வன் தெற்கு தத்தமங்கலத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம், 2.6 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
கொடுத்த கடனை குணசேகரன் பலமுறை கேட்டும் வெற்றிச்செல்வன் இழுத்தடித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குணசேகரன் தனது சகோதர்களுடன் சென்று வெற்றிச்செல்வனிடன் பணம் கேட்டுள்ளார். குடிபோதையில் இருந்த வெற்றிச்செல்வன் தான் வைத்திருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு குணசேகரன் மற்றும் அவரது சகோதர்களை விரட்டியுள்ளார்.
தனது மனைவி தடுத்தும் கேட்க்காத வெற்றிச்செல்வன் சாலையில் ஓட ஓட அவர்களை விரட்டிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வரைலாகிவருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இரண்டு தரப்பினரிடமும் விசாரணை நடத்திவருகின்றனர்.