காவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள்! தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்! திக் திக் நிமிடங்கள்!
dmk leader kalaingar karunanidhi admitted in ICU at kavery hospital
திமுக தலைவர் கலைஞர் சிலநாட்களாக மிக மோசமான உடல்நிலை காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை மிக மோசமானதை அடுத்து அவரது கோபாலபுரம் இல்லத்தில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கருணாநிதியில் உடல் நிலை மீண்டும் சீரியஸ் ஆனதால் சிகிச்சைக்காக தற்போது அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் திடீரென கருணாநிதியின் உடல் மோசமடைந்ததாக செய்திகள் வெளியானது. துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் நேற்று இரவு மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்து சென்றனர்.
தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், உள்ளிட்டோர் நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்றனர். குடியரசுத் தலைவர் , குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் மோடி, சந்திர பாபு நாயுடு, மம்தா பானர்ஜி, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டஅரசியல் கட்சித் தலைவர்கள் ஸ்டாலினிடம் போனில் நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு கோபாலபுரம் இல்லம் திடீரென பரபரப்பானது. காவேரி மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் குழுவும், கலைஞரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல காவேரி மருத்துவமையில் இருந்து ஆம்புலன்ஸ் வண்டியும் வந்தது.
பரபரப்பான சூழலை அடுத்து தொண்டர்களின் கூச்சலுடனும், கண்ணீருடனும் தலைவர் கலைஞர் அவர்களை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் காவேரி மருத்துவமனையை அடைந்தது.
சிறிது நேரத்தில் மருத்துவமனையை அடைந்த ஆம்புலன்ஸில் இருந்து கலைஞரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மருத்துவர்கள் அழைத்து சென்றனர். தற்போது காவேரி மருத்துவமனையின் நான்காவது மாடியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.