திமுக இளைஞரணி மாநாடு வெற்றி, சாதனை படைப்பு: அமைச்சர் கே.என் நேரு..!
திமுக இளைஞரணி மாநாடு வெற்றி, சாதனை படைப்பு: அமைச்சர் கே.என் நேரு..!
சேலத்தில் திமுக சார்பில் பிரம்மாண்டமாக இளைஞர் அணி மாநாடு நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.
இந்த மாநாட்டிற்காக 100 நாட்களுக்கு முன்பு இருந்தே பந்தல் அமைப்பது உட்பட பிற பணிகள் அனைத்தும் நடைபெற்று வந்து, நேற்று மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை, மாலை, மதியம் ஆகிய மூன்று வேலைகளிலும் உணவுகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு தெரிவிக்கையில், "சேலம் மாநாட்டின் செலவுத்தொகை தொடர்பாக இனி தான் கணக்கு செய்ய வேண்டும். இந்த மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்து கொண்டார்கள். கூட்ட நெரிசல் காரணமாக திடலுக்கு பலரால் வர முடியவில்லை.
எதிர்பார்த்த அளவு வெற்றியடைந்துள்ள மாநாடு, தேர்தலிலும் எதிரொலிக்கும் பந்தலை 100 நாட்களில் உருவாக்கி நாங்கள் சாதனை படைத்திருக்கிறோம்" என்றார்.