திமுக தலைவர்கள் டீ-சர்ட்டுடன் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தை பாராட்டி மகிழ்ந்த முதியவர்; மீண்டும் மோடி, வேண்டும் மோடி.!
திமுக தலைவர்கள் டீ-சர்ட்டுடன் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தை பாராட்டி மகிழ்ந்த முதியவர்; மீண்டும் மோடி, வேண்டும் மோடி.!
2024 மக்களவை தேர்தல் விறுவிறுப்பு பெற்று, தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் புயல் வேகத்தில் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து இருக்கின்றனர்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர், இளைஞர் அணி தலைவர், தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர் வினோஜ் பி செல்வம் (Vinoj P Selvam). தொழிலதிபரான இவர் தனது 21 வயதில் இருந்து பாஜகவில் இணைந்து மக்கள் பணிகளை செய்ய தொடங்கி, இன்று மக்களின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறார்.
கடின உழைப்பால் உயர்ந்த வினோஜ் பி செல்வம், பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை மக்களவை தொகுதியில் பாஜகவின் அதிகாரபூர்வ வேட்பாளராக களமிறங்கி, மக்களை நேரில் சந்தித்து தொடர்ந்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களிலும் தினமும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
முன்னதாக மக்கள் நலப்பணியில் விருப்பம் கொண்ட வினோஜ் பி செல்வம், மத்திய சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்கள் வாயிலாக மக்களுக்கு அன்னதானம் வழங்குவது, நற்பணிகள் செய்வது என தொடர்ந்து மக்களின் அடையாளத்தையும் பெற்றுவந்தார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிவேட்பாளராக அவர் களமிறங்கி இருக்கிறார்.
வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம் மக்கள் செல்வத்திற்கு வழங்கும் சிறப்பு ஆதரவு காரணமாக, தொடர்ந்து அவர் களப்பணியில் ஈடுபட்டு வருகிறார். கூட்டணிக்கட்சி தலைவர்களும் அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வினோஜ் பி செல்வம் வாக்குசேகரிக்க சென்ற சமயத்தில், வயதான நபர் ஒருவர் அவரை பார்க்க ஆவலுடன் காத்திருந்தார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படம் கொண்ட டி-சர்ட் அணிந்த முதியவர், வினோஜ் பி செல்வம் வருகை புரிந்ததை கண்டு ஆவலுடன் அவரை பாராட்டி, கைகொடுத்து அங்கிருந்து சென்றார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், பாஜகவினர் முதியவரின் அடையாளம் வேறாக இருந்தாலும், அவரின் விருப்பம் பாஜகவே என பாராட்டி பேசி வருகின்றனர்.
தேர்தல் களநிலவரத்தை பொறுத்தமட்டில் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தலைமையிலான கூட்டணியில் இருப்போர், பிரதமரின் மீதான பற்றுதலை புரிந்துகொண்ட பாஜகவுக்கு வருகை தந்து ஆதரவளிப்பது நடந்து வருகிறது. இவ்வாறான தருணத்தில் முதியவர் ஒருவர் தனது வாழ்த்து மற்றும் ஆதரவை திமுக டி-சர்ட்டுடன் செல்வத்துக்கு அளித்துச்சென்றது கவனத்தை பெற்றுள்ளது.