திருமணமான 4 மாதத்தில் மருத்துவர் மர்ம மரணம்: பணிச்சுமையால் தற்கொலை?.. மனைவி கண்ணீர்.!
திருமணமான 4 மாதத்தில் மருத்துவர் மர்ம மரணம்: பணிச்சுமையால் தற்கொலை?.. மனைவி கண்ணீர்.!
பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் மருதுபாண்டி (வயது 31). இவர் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கூடுவாஞ்சேரி பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் அனிதா.
இவர்கள் இருவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்திற்கு பின்னும் வேலை காரணமாக மருதுபாண்டி சூளைமேடு பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.
அதேபோல அனிதாவும் விடுதியில் தங்கியிருந்து மருத்துவமனைக்கு சென்று பணியாற்றி இருவரும் செல்போனில் குடும்பம் நடத்தி வந்த நிலையில், அவ்வப்போது நேரில் சந்தித்துக் கொண்டிருந்தனர். கடந்த 9-ம் தேதி மற்றும் 10-ம் தேதியில் கணவரை அனிதா தொடர்பு கொண்டபோது அவர் ஃபோனை எடுக்கவில்லை.
இதனால் அச்சமடைந்த அனிதா தனது உறவினர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கணவரின் வீட்டிற்கு சென்ற பார்க்குமாறு கூறியுள்ளார். அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது மருது பாண்டியன் வீட்டின் அருகில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, விரைந்து வந்த அதிகாரிகள் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர்கள் இது தொடர்பாக குற்றச்சாட்டை முன்வைக்கையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 36 மணிநேரம் தொடர்வேலை கொடுத்ததாகவும், இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம என்றும் கூறப்படுகிறது. இந்த விஷயத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.