மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உடனே அரசு வேலை.! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர்.!
Doctor, nurse got government job immediately
இந்தியாவில் கொரோன வைரஸ் கோர தாண்டவம் அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் வரும் ஏப்ரல் 15-ம் தேதிவரை யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார் பிரதமர் மோடி.
கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் தமிழக முதல்வர் தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதாவது கூடுதலாக மருத்துவ பணியாளர்களை நியமனம் செய்யவுள்ளார். அதன் படி, 530 மருத்துவர்களும்,1000 செவிலியர்களும்,1508 லேப் டெக்னீஷியன்கள், 200 கால ஊர்திகள் என அனைத்தும் நிரப்பப்படுகின்றன என கூறியுள்ளார்.
குறிப்பாக இவர்கள் அனைவரும் பணி ஆணை கிடைத்த 33 நாட்களில் பணியில் வந்து சேர வேண்டும் என்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அவர்களுக்கு சிகிச்சை செய்ய போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.