மருத்துவமனையில் செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்.! செவிலியர் எடுத்த விபரீத முடிவு.!
மருத்துவமனையில் செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்.! செவிலியர் எடுத்த விபரீத முடிவு.!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவன்துரை என்பவரின் மனைவி ஜெயந்திகிருஷ்ணா கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையின் உரிமையாளரும், மருத்துவருமான முரளி என்பவர், கடந்த 23ம்தேதி ஜெயந்திகிருஷ்ணாவிடம் உள்நோயாளிகளை பார்க்க ரவுன்ட்ஸ் செல்ல வேண்டும் என கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு யாரும் இல்லாத அறையில் வைத்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயந்திகிருஷ்ணா, மருத்துவரை திட்டியுள்ளார். இதனையடுத்து சில நாட்களில் மருத்துவமனை நிர்வாகம் ஜெயந்திகிருஷ்ணாவை வேலையில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தூக்க மாத்திரை விழுங்கி மயங்கி விழுந்த ஜெயந்திகிருஷ்ணாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் மருத்துவர் முரளி மீது வழக்குபதிவு செய்து இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.