இனி ரேஷன் கடைகளில் இதனை விற்பனை செய்யக்கூடாது... தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!
இனி ரேஷன் கடைகளில் இதனை விற்பனை செய்யக்கூடாது... தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச அரிசி மற்றும் மலிவான விலையில் பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் போன்றவற்றை தமிழக அரசு மக்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேசன் அட்டைக் காரர்களுக்கும் இலவச துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவற்றை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பொது மகக்களுக்கு வழங்குவதற்காக தமிழகத்திற்கு 8,500 டன் கோதுமை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு ரேசன் கடைகளில் விற்பனை களைக்கட்டு என்பதால் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேசன் கடைகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரேசன் கடைகளில் தனியார் நிறுவனங்களின் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அதன் தரம் குறைவாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். எனவே பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய கூடாது என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.