×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆசிரியர் தேர்வில் முதலிடம் பிடித்தவருக்கு ஜனாதிபதியின் பெயர் கூட தெரியவில்லை! தேர்வில் முதலிடம் பிடித்தது எப்படி?

Don't know president name for first mark in teachers exam

Advertisement

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வில் முதலிடம் பிடித்தவருக்கு கஜனாதிபதியின் பெயர் தெரியவில்லை என்பது முதலிடம் பிடித்தவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் காலியாக உள்ள 69,000 ஆசிரியர் பணிக்கு தேர்வுகள் நடைபெற்று உள்ளன. இந்த தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாக அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கில் பலரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட பணிநியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து பணிநியமனம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தது. 

இதனையடுத்து உதவி ஆசிரியர்களின் 37,339 பதவிகளை காலியாக வைக்குமாறு உச்சநீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது, இதன் மூலம் மாநிலத்தில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, உதிர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அங்கு நடந்த ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு முறைகேடு குறித்து சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து இதுதொடர்பாக அம்மாநில காவல் அதிகாரிகள் தீவிர விசாரணையில் களமிறங்கினர்.

இந்தநிலையில், இந்த வழக்கை விசாரித்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரை கைது செய்துள்ளோம். அவர்களில் தேர்வில் 95 சதவீத மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்த நபரிடம் விசாரணை நடத்தும் போது அவரிடம் பொது அறிவு குறித்த அடிப்படை கேள்விகள் கேட்டதற்க்கே அவரால் பதில் கூற முடியவில்லை. இந்தியாவின் ஜனாதிபதி யார் என்று கேட்டால் கூட தெரியவில்லை என்று கூறியதாக காவலர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#exam #teachers #President
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story