ஓசியில் பஜ்ஜி, போண்டா தரததால் மூதாட்டி மீது சிலிண்டர் தூக்கிப் போட்ட கஞ்சா குடுக்கிகள்.!
ஓசியில் பஜ்ஜி, போண்டா தரததால் மூதாட்டி மீது சிலிண்டர் தூக்கிப் போட்ட கஞ்சா குடுக்கிகள்.!
காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய கொளுத்துவான் சேரி பகுதியை சேர்ந்தவர் ராணி பாய். வயது முதிர்ந்த ராணி பாய் அதே பகுதியில் பஜ்ஜி, போண்டா விற்பனை செய்து வருகிறார்.
என்ன நிலையில் நேற்று முன்தினம் கஞ்சா போதையில் அங்கு வந்த இளைஞர்கள் சிலர் ஓசியில் பஜ்ஜி போண்டா கேட்டு மூதாட்டியிடம் தகராறு செய்துள்ளனர்.
இதற்கு மூதாட்டி தர மறுத்ததால், ஆத்திரமடைந்த கஞ்சா குடுக்கிகள் பஜ்ஜி மற்றும் போண்டாவை கீழே தள்ளிவிட்டுள்ளனர். மேலும் கேஸ் சிலிண்டரின் டியூப்பை பிடுங்கி சிலிண்டரை தூக்கி மூதாட்டி மீது போட்டுள்ளனர்.
இதனால் பலத்த காயம் அடைந்த மூதாட்டி அலறி துடித்துள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் இளைஞர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனிடையே காயமடைந்த மூதாட்டியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூதாட்டியை தாக்கிய கஞ்சா குடுக்கிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.