மது போதையில் தகராறு.. சக நண்பனை அடித்துக் கொன்ற கொடூரம்!
மது போதையில் தகராறு.. சக நண்பனை அடித்துக் கொன்ற கொடூரம்!
சென்னை அருகே மதுபோதையில் சக நண்பனையே அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த சுமேஷ் வண்டலூர் சென்று தனக்கு நண்பர் லோகேஷ் சந்தித்தபின் மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அதன்படி, மொத்தமாக 5 நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.
இதனையடுத்து மது போதையில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லோகேஷ் மற்றும் தயாகரன் இருவரும் சேர்ந்து சவுக்கு கட்டையால் சுமேஷை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தலைமறைவாக இருந்த லோகேஷ் மற்றும் தயாகரன் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.