தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதலி பெயரில் போலி பத்திரம் பதிந்து நிலம் அபகரிக்க முயற்சி; 72 வயது முதியவர் கொலை வழக்கில் திடுக்.!

கள்ளக்காதலி பெயரில் போலி பத்திரம் பதிந்து நிலம் அபகரிக்க முயற்சி; 72 வயது முதியவர் கொலை வழக்கில் திடுக்.!

due to Land Dispute man Killed former MP Assistant  Advertisement


வடசென்னை திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த குப்புசாமி. கடந்த 2013ல் இவரின் உதவியாளராக பணியாற்றியவர் குமார் (72). மார்ச் 16 அன்று தாம்பரம் சேலையூரில் இருக்கும் மகளின் வீட்டுக்கு சென்றவர், பின் தாம்பரம் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று மாயமாகினார். அவரை தேடியும் காணாத காரணத்தால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் குமார் - சேலையூரை சேர்ந்த ரவி இடையே நிலப்பிரச்சனை இருப்பது உறுதியானது. அவரை கைது செய்தபோது, குமாரை கொலை செய்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் உடலை புதைத்ததாக கூறினார். ரவியின் கூட்டாளியான பூந்தமல்லி விஜய், செந்தில் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

போலி நிலப்பத்திரம்

கொலைக்கான காரணம் குறித்து குற்றவாளிகள் கூறுகையில், குமாரின் உறவினருக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கானாத்தூர், முத்தாண்டி பகுதியில் ஒரு கிரவுண்ட் அளவிலான நிலம் உள்ளது. இந்நிலம் குமாரின் பராமரிப்பில் இருந்தது. இதன் தற்போதைய மதிப்பு பலகோடி ஆகும். இந்நிலத்தின் மீது ஆசைப்பட்ட ரவி, கள்ளக்காதலி தனலட்சுமி பெயரில் நிலத்தை போலி பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை., குற்றவாளி ஞானசேகரன் விவகாரம்; மேலும் புதிய வழக்கு.. அதிகாரிகள் விசாரணை.!

chennai

குமாரின் உறவினர் பெண் மகாலட்சுமியின் பெயரில் அசல் நிலப்பத்திரம் இருக்கிறது. நிலத்தை அபகரிக்க மகாலட்சுமியின் பெயரில் போலியான பெண் ஒருவரை ஏற்பாடு செய்த ரவி, கள்ளக்காதலி தனலட்சுமிக்கு நிலத்தை விற்பனை செய்ததுபோல, போலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அசல் ஆவணத்தை கைப்பற்றும் எண்ணத்துடன் குமாரை சம்பவத்தன்று தாம்பரத்தில் இருந்து கடத்தல் சம்பவமும் நடைபெற்றது. அசல் பத்திரத்தை கேட்டு தாக்குதல் நடைபெற்றது.

பத்திரம் கேட்டு கொலை

அவர் தனது கொள்கையில் உறுதியாக இருந்ததால், ஒருகட்டத்தில் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார். காரிலேயே அவரின் சடலத்தி செஞ்சியில் உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றவர்கள், குமாரின் உடலை புதைத்து சென்னை திரும்பி இருக்கின்றனர். எதுவும் தெரியாததுபோல் சுற்றியதுபோது, அதிகாரிகள் அவர்களை அதிரடியாக கைது செய்தனர்.

வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது. காஞ்சனா திரைப்படத்தில், போலி நிலப்பத்திரம் தயார் செய்து அரங்கேறும் கொலை சம்பவம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்று இருக்கும். அதேபோல, இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படிங்க: #Breaking: ரூ.67000-ஐ நோக்கி தங்கம்.. இன்று விலை மேலும் உயர்வு..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Tambaram #Murder #Crime #நிலத்தகராறு #சென்னை #கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story