துல்கர் சல்மானின் கார் டிரைவர் மர்மமான முறையில் மரணம்... போலீசார் விசாரணை... இதுதான் காரணமா.?
துல்கர் சல்மானின் கார் டிரைவர் மர்மமான முறையில் மரணம்... போலீசார் விசாரணை... இதுதான் காரணமா.?
பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் சென்னையில் வசித்து வருகிறார். மேலும் இவரிடம் டிரைவராக வடபழனியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் டிரைவர் பாஸ்கர் நேற்று முன்தினம் முழுவதும் துல்கர் சல்மான் வீட்டில் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இரவு 10 மணிக்கு மேல் பீட்சா மற்றும் குளிர்பானத்தை சாப்பிட்டு விட்டு உறங்க சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் காலை வெளியே செல்வதற்காக துல்கர் தனது கார் டிரைவரான பாஸ்கரை எழுப்ப சென்றுள்ளார். ஆனால் அவர் தூங்கிய நிலையில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் அங்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸில் இருந்த செவிலியர்கள் பாஸ்கரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவம் குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பாஸ்கரின் இறப்பிற்கான காரணத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.