×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரு பெண்ணுடன் 4 நாட்கள் மட்டுமே உல்லாசம்! இதுவரை 24 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த போலி சப்-இன்ஸ்பெக்டரின் பதறவைக்கும் வாக்குமூலம்!

duplicate police arrest for cheated girls

Advertisement

சென்னை, எழும்பூரைச் சேர்ந்த, 19 வயது இளம்பெண்ணை காணவில்லை என, அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து காணாமல் போன இளம்பெண்ணை தீவிரமாக தேடிவந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளம்பெண் அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வந்த, ராஜேஷ் பிரித்வி என்பவரால், திருப்பூருக்கு கடத்தப்பட்டது  தெரியவந்தது. இந்தநிலையில் திருப்பூருக்கு சென்று இளம்பெண்ணை மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து தலைமறைவாக இருந்த, ராஜேஷ் பிரித்வியை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற ராஜேஷ் பிரித்வி, தன்னுடன் வருமாறு அவரை அழைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் ராஜேஷ் பிரித்வியை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து அவரிடம் இருந்து, போலீஸ் சீருடை, போலி அடையாள அட்டைஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேஷ் கூறுகையில், தனது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம். நான் 2014ல், சென்னைக்கு வந்தேன். இளம்பெண்களுக்கு திருமண ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்து நகை, பணம் பறித்து சொகுசாக வாழ வேண்டும் என நினைத்து முகநூலில் போலீஸ் சீருடை அணிந்த என் படங்களை வெளியிட்டேன். அதை நம்பிய இளம்பெண்களுக்கு, திருமண ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்தேன்.

ஒரு பெண்ணுடன், நான்கு நாட்கள் மட்டுமே குடும்பம் நடத்துவேன். பின், உல்லாச வீடியோக்களை, பேஸ்புக்கில் வெளியிடுவேன் என மிரட்டியே, அவர்களை விரட்டிவிடுவேன். 2016ல், ஆந்திராவை சேர்ந்த, மூன்று இளம்பெண்களுக்கு, திருமண ஆசை காட்டி, கணவன், மனைவி போல நெருக்கமாக இருந்துஅவர்களிடம் இருந்த நகை, பணம் போன்றவற்றை பரித்தேன். இதனால் ஆந்திர போலீசார் கைது செய்தபோது அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டேன்.

எனது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இளம்பெண்களை அவர்களுக்கு தெரியாமல் படம் எடுத்து, அவர்களை தனது ஆசைக்கு இணங்கவைத்தேன். இதுபோல, 24 இளம்பெண்களை என் சொந்த ஊருக்கு காரில் கடத்தி உல்லாசம் அனுபவித்துள்ளேன் என கூறினார். 
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#policemen #arrested
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story