×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பரபரப்பு... DYFI நிர்வாகி மீது கொலை முயற்சி.... 5 பேர் கைது! கொலை முயற்சிக்குப் பின்புலம் தேசிய கட்சியா.?

பரபரப்பு..‌ DYFI நிர்வாகி மீது கொலை முயற்சி.... 5 பேர் கைது! கொலை முயற்சிக்குப் பின்புலம் தேசிய கட்சியா.?

Advertisement

திருச்சி அரியமங்கலம் பகுதியில்  இந்திய  ஜனநாயக இளைஞர் சங்கத்தின் கிளைச் செயலாளர் வெட்டப்பட்டுள்ள சம்பவம் திருச்சி பகுதியில் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவர் மீது கொலை முயற்சி செய்தவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறி  திருச்சி ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி அரியமங்கலம் அம்மா குளம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது தவ்பிக் இவர்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அம்மா குளம் கிளைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். சமூகப் பணிகளில் அதிக ஆர்வம் கொண்ட தவ்பீக்கை நேற்று இரவு 15 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்குள்ள மக்கள்  மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்கள் அதன் தலைவர் லெனின் தலைமையில் அரசு மருத்துவமனை முன்பு கூடினர். மேலும்  தவ்பிக்  மீது கொலை முயற்சி   செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்  திருச்சியின் பிரதான சாலை என்பதால் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  டிஒய்எஃப்ஐ நிர்வாகிகள் தவ்பிக்  சமூக விழிப்புணர்வோடு போதைப் பொருள்களுக்கு எதிராக  தீவிரமாக களமாடி வந்த தோழர் எனவும் அதன் காரணமாக கஞ்சா பண்ணையில் ஈடுபட்டு வரும் பாஜகவை சார்ந்த  வினோத் மற்றும் அவரது கட்சியினர்தான் தவ்பிக் மீது கொலை வெறி தாக்குதல் நடத்த இருப்பதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் திருச்சி பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர்  பன்னீர்செல்வம் ரங்கா  பாலாஜி சந்தோஷ் குமார்  மற்றும் ஆணை முத்து ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #tiruchirapalli #ariyamangalam #DYFI #secretaryattacked
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story