×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: இது ஜனநாயக படுகொலை.. இருட்டடிப்பு: எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்.!

#Breaking: இது ஜனநாயக படுகொலை.. இருட்டடிப்பு: எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்.!

Advertisement

 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை தொடர்பாக கடும் விவாதம் திமுக - அதிமுக இடையே நடந்து வருகிறது. சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை, யார் அந்த சார் பேட்ச் அணிந்து வருகை தருகின்றனர். இவர்கள் தொடர்பான காணொளி அரசின் நேரலை பக்கத்தில் பதிவு செய்யப்படுவதில்லை. 

அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினாலும், அதனை ரத்து செய்து, சபாநாயகரின் விடியோவை காண்பித்து, முதல்வர் / அமைச்சரின் உரையை காண்பிக்கின்றனர். இதனால் அதிமுக அதிமுக உறுப்பினர்கள் நேரலையில் கட்டப்படவில்லை என கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் பதிவை வெளியிட்டு இருக்கிறார். 

இதையும் படிங்க: "மாணவிகளின் கல்வியை கெடுத்துறாதீங்க" - முதல்வர் முக ஸ்டாலின் கலங்கி, உருக்கமான பேச்சு.! 

அஞ்சி நடுங்கும் திமுக?

இந்த விசயம் குறித்து எடப்பாடி பழனிச்சாமியின் எக்ஸ் வலைப்பதிவில், "ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை? சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை. எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா முக ஸ்டாலின் அவர்களே? எதற்காக இவ்வளவு அஞ்சி நடுங்குகிறீர்கள்? 

ஜனநாயக படுகொலை

"#யார்_அந்த_SIR?" என்ற நீதிக்கான கேள்வி உங்களை அவ்வளவு உறுத்துகிறது என்றால்,  மீண்டும் கேட்கிறேன் , யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு? மக்கள் நலனுக்கான, எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக் கூடாது என்று ஸ்டாலின் மாடல் அரசு எத்தனிப்பது ஜனநாயகப் படுகொலை!

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை, எந்தவித ஒளிவு மறைவுமின்றி, முழுமையாக, மக்களின் குரலான எதிர்க்கட்சியின் கருத்துக்களை மக்களுக்கு நேரடி ஒளிபரப்ப வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு சட்டமன்றம், 
பொதுமக்களின் தேவையை சபையேற்றி, சட்டமியற்றி, திட்டமியற்றி செயல்படும் தமிழக மக்களின் மேடை; திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல!" என தெரிவித்துள்ளார்.

 
 

 

 

இதையும் படிங்க: #JustIN: "எமர்ஜன்சியா இது? ஜனநாயகத்துக்கு நல்லதல்ல" - தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#edappadi palanisamy #எடப்பாடி பழனிச்சாமி #TN Assembly #சட்டப்பேரவை #திமுக #dmk
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story