பாவங்க!! இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது!! 6 பிள்ளைகள் இருந்தும் ஒருவேளை சாப்பாட்டிற்கே தவித்த வயதான தம்பதி!! போலீசில் தஞ்சம்
6 பிள்ளைகள் பெற்றும் இறுதி காலத்தில் ஒருவேளை சாப்பாட்டிற்குக்கூட வழியில்லாமல் அவதிப்பட்ட ப
6 பிள்ளைகள் பெற்றும் இறுதி காலத்தில் ஒருவேளை சாப்பாட்டிற்குக்கூட வழியில்லாமல் அவதிப்பட்ட பெற்றோரின் நிலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்தவர் பொன்னையா(79). இவரது மனைவி பாண்டியம்மாள்(69). இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். அனைவர்க்கும் திருமணம் முடிந்து அனைவரும் தனித்தனியாக தங்கள் குடும்பத்துடன் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில் வயதான காலத்தில் பொன்னையா மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாள் இருவரும் வாடகை வீட்டில் தனியாக வசித்துவந்துள்ளனர். ஏற்கனவே பொன்னையாவிற்கு இடது கை செயலிழந்துவிட்ட நிலையிலும் காவலாளியாக வேலை பார்த்து பிழைப்பு நடத்திவந்துள்ளார்.
தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் பொன்னையாவிற்கு வேலை இல்லை. இதனால் கணவன் மனைவி இருவரும் ஒருவேளை சாப்பாட்டிற்கே வழியில்லாமல் அவதிப்பட்டுள்ளனர். 6 பிள்ளைகள் இருந்தும் இவர்களை யாரும் கண்டுகொள்ளாததால் வறுமையின் கொடுமையால் தம்பதியினர் மனமுடைந்தனர்.
இதனை அடுத்து தங்களுக்கு உதவி செய்யுமாறு கணவன் மனைவி இருவரும் திண்டுக்கல் நகர் மேற்கு போலீசில் புகார் அளித்தனர். இவர்கள் கொடுத்த புகாரை அடுத்து, போலீசார் இவர்களின் 6 பிள்ளைகளையும் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இறுதியில் தங்கள் இளைய மகளுடன் செல்ல கணவன் மனைவி இருவரும் சம்மதித்தை அடுத்து, போலீசார் அவர்களை அவர்களது இளைய மகளுடன் அனுப்பிவைத்தனர்.
6 பிள்ளைகள் பெற்றும் கடைசி காலத்தில் ஒருவேளை சோறு போட ஆளில்லாமல் அவதிப்பட்ட வயதான பெற்றோரின் நிலை அனைவரையும் கண்கலங்கவைத்துள்ளது.